Showing posts with label History. Show all posts
Showing posts with label History. Show all posts

Sunday, January 19, 2020

தமிழ் சினிமா வரலாறு பாகம் 1 - விமர்சனம்


தமிழ்த் திரைப்படங்களின் வரலாறு காளிதாஸிலிருந்தே அனைவரும் தொடங்குகின்றனர். ஊமைப் படக் காலத்தில் என்னென்னப் படங்கள் வந்தன, அதில் பணியாற்றிய நடிகர்கள், இயக்குனர்கள், கதாசிரியர்கள் யார்? இந்தக் கேள்விகளுக்கு எளிமையான ஆனால் தெளிவான பதில்களை இப்புத்தகம் வழங்குகிறது.

அஜயன் பாலா எழுதியுள்ள இந்நூல் தமிழ்த் திரைப்படங்களின் வரலாற்றை 1916யிலிருந்து 1947 வரை அக்கு வேறு ஆணி வேறாக அலசுகிறது. 600 பக்கப் புத்தகம், தகுந்த புகைப்படங்களுடன் விறுவிறுப்பான முறையில் எழுதப்பட்டுள்ளது. எந்தத் துறையின் வரலாறாக இருந்தாலும் சரி - இதைப் போல சுவையுடன் எழுதினால் வாசகர்கள் வரலாற்றை எளிதாகவும் விரும்பியும் படிப்பார்கள். பல வரலாற்று நூல்கள் குறிப்பெடுக்க மட்டுமே உதவுகின்றன. ஆனால் இந்நூல் புதினத்தைப் போல படித்து இன்புறவும், தேவைப்படும் போது குறிப்பெடுக்க உதவும்படியும் எழுதப்பட்டுள்ளது.

கேள்விப்படாத பல தகவல்கள் இந்த நூலில் குவிந்து கிடக்கின்றன. மாதிரிக்குச் சில தகவல்கள் -
சங்கரதாஸ் நாடக உலகைத் துறந்த காரணம்...
சினிமா தோன்றிய அடுத்த வருடத்திலேயே சென்னையில் துண்டுப் படங்கள் திரையிடப்பட்ட செய்தி...
பாட்லிங் மணி - முதல் ஆக்ஷன் ஹீரோ...
மீனா நாராயணன் - முதல் பெண் ஒலிப்பதிவாளர் ...
விடிய விடிய கச்சேரி செய்த தியாகராஜ பாகவதர்...
பல்துறை வித்தகரான நடிகர் ராஜம்...
என்.எஸ்.கிருஷ்ணனின் முதல் படம்...
எம்.ஜி.ஆர். புகைப் பிடித்த ஒரே படம்...

எண்ணற்ற செய்திகள்...யாருமறியா குறிப்புகள்....துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என யாரையும் விட்டு வைக்காமல் முழுமையான வரலாறாக இந்நூல் அமைந்துள்ளது.

தமிழ்த் திரைப்படங்களின் வரலாற்றை இதுவரை யாரும் இவ்வளவு விரிவாக எழுதியதில்லை. ஆசிரியர் பெரிதும் உழைத்துள்ளார் என்பது இதைப் படிக்கும்போது நம்மால் உணர முடிகிறது. ஈடு இணையற்ற நூல் - இந்தத் துறையில்.

பத்திக்குப் பத்துப் பிழைகளாவது இருக்கும். மொழிப் பிழைகள் எக்கச்சக்கம். சில இடங்களில் முன்பே கூறிய விஷயங்கள் திரும்பவும் விளக்கப்படுகின்றன. அரசியல் சார்ந்த சில பக்கங்கள் நூலின் ஓட்டத்துடன் ஒட்டவில்லை. சில இடங்களில் திரைப்படங்களின் வரிசைப்படுத்துதலில் தவறுகள் உள்ளன. சில விஷயங்கள் அரை குறையாகக் கூறப்பட்டுள்ளன. உதாரணமாக லட்சுமி காந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு எதிராகச் சதி செய்ததாக வாசன், கல்கி போன்றோரைக் காரணமின்றி குறை சொல்வது ஏற்கும்படியாக இல்லை. இப்படிப்பட்ட குறிப்புகளுக்கு விளக்கம் தேவை என்பதை ஆசிரியர் உணரவில்லை.

Monday, July 24, 2017

Gods, Kings & Slaves - My Review

The day when I felt sorry for Malik Kafur...

Yes, I felt sorry for such an evil historical character for the first time in my life after reading this book.

"Gods, Kings & Slaves" is one of the best English novels from India that I have read in the recent years.

There are abundant number of historical novels written in English or other regional languages of India. Most of them glorify some king and try to encourage hero worship. But, in this novel all the characters are realistic. They would love, hate, worship, kill, win and lose. They would be audacious as well as fearsome. The characterization of all the characters are very natural. The author is not inclined towards any particular character and tries to exalt or degrade any character.

The story-line is based on some lesser known historical facts (the later Pandyas and the invasion of South India by Malik Kafur). They are lesser known to Tamil Nadu and half of the story is literally unknown to the rest of India. The author is courageous enough to choose a story which is not well introduced to the majority population of this country.

Two parallel stories from two different regions of India make us to feel like reading two captivating stories simultaneously. As most of the details given in this novel match exactly the historical records, it is more like reading the history narrated in an interesting way.

The success of a story is determined on the basis of the reader who would like to put himself/herself on the shoes of the characters that he/she reads about. When Malik Kafur gets betrayed, I feel sorry; when Khilji is going to be murdered, I fear; when Veera Pandyan retreats, I feel like slapping him; when Malik Kafur enters into the temple, I feel like jumping into the scene and face him.

There are two sets of authors when it comes to the historical fiction. The first set of authors simply avoid writing the details of war strategies. The second set of authors write in detail about the battle, which would be too boring for the readers. However, this author gives all the details of the battles, the strategies of the rulers and how the battles were planned in a very gripping way.

The part of Malik Kafur is much interesting than the part of the Pandyas. Some initial chapters of the Pandyan part could have been written much better. The spelling of few Sanskrit terms are different from the way how they are written by the people outside Tamil Nadu. Varna is different from caste; the author calls some of the Varnas as caste in a few places.

I have read all the Tamil novels written by this author. This novel is better than any of his earlier novels. It would be great if he continues to write many such historical novels in similar style in English. 

Thursday, April 9, 2015

அனுஷா வெங்கடேஷின் "காவிரி மைந்தன்" - என் விமர்சனம்

கதை எழுதுவது சுலபமான  காரியமில்லை. நூறு பக்கங்கள் கொண்ட கதையை ஒரு மணி நேரத்தில் ஒரு வாசகன் படித்து விடக் கூடும். ஆனால் அந்த நூறு பக்கங்களைச் சுவைப்பட தருவதற்கு எழுத்தாளன் நிறைய உழைக்க  வேண்டி  இருக்கும்.

ஆயிரம் பக்கங்களுக்கு மேலான நீண்ட கதை எழுதுவது இன்னும்  கடினம். இவ்வளவு பெரிய கதையை எழுத பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும் எழுத்தாளன் தனது வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களின் பாதிப்பு கதையின் இயல்பைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது அவனுக்குப்   பெரிய சவால். அத்தனை பக்கக் கதையில் தொய்வில்லாமல் பார்த்துக் கொள்வதும் சவாலே.

சரித்திர நாவல் எழுதுவது இன்னும் பெரிய சவாலான காரியம். வரலாற்றுப் பாத்திரங்களின்  இயல்பையோ வரலாற்றையோ பெரிதாக மாற்ற முடியாது. அனைவருக்கும் தெரிந்த வரலாற்றில் கற்பனைக் கதாபாத்திரங்கள் மூலம் சுவையாகக் கதையை நகர்த்த தெரிந்திருக்க வேண்டும்.

மேலே கூறிய அனைத்து விஷயங்களை விடவும் கடுமையான காரியம் கலை மகள் அவதாரம் எடுத்து வந்ததைப்  போல தெய்வீக காவியத்தைப் படைக்கக் கூடிய எழுத்தாளரின் கதையின் அடுத்த பாகத்தை எழுதுவது.

இப்புத்தகத்தின் ஆசிரியர் மேற்கண்ட அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக எதிர் கொண்டு அருமையான வரலாற்று நாவலைப்  படைத்துள்ளார். தமிழில் இதுவரை வெளியான சிறந்த பத்து சரித்திர நாவல்களில் கண்டிப்பாக இது ஒன்று. இது பெரிதாக வெகுஜன வாசகர்களைச் சென்று அடையாதது துரதிர்ஷ்டம்.

'பொன்னியின் செல்வன்' நாவலால் ஏதாவது  ஒரு வகையில் பாதிக்கப்படாதவர் தமிழ் தெரிந்தவராக இருக்க முடியாது. இந்த நூலாசிரியரும் அந்த நாவலால் கவரப்பட்டு அதன் தொடராக இந்த நாவலை எழுதியுள்ளார். பல எழுத்தாளர்களும் 'பொன்னியின் செல்வனின்' அடுத்த பாகத்தை எழுதியுள்ளனர். இந்த நாவலின் சிறப்பு என்னவென்றால் பொன்னியின் செல்வனின் கதைக்கு உகந்தவாறு கதை அமைந்துள்ளது. தொடர்ச்சி என்ற பெயரில் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு மாறுபாடான கதையை சில எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். இக்கதாசிரியர் அந்த தவறைச் செய்யவில்லை.

'பொன்னியின் செல்வன்' வெற்றிக்கு முக்கியமான காரணம் அதில் நகைச்சுவை, வீரம், காதல், பக்தி, வரலாறு, கற்பனை, புவியியல் எல்லாமே சரியான அளவில் கலந்து சுவையான கதையாக உருவாகியிருக்கும். 'காவிரியின்  மைந்தன்' கதையும் இந்த அம்சங்களை எல்லாம் தன்னுள் கொண்டுள்ளது.

தெரிந்த வரலாறு; அருள் மொழி வர்மர் என்ற ராஜா ராஜ சோழன் உயிரோடு இருந்து இந்த தென்னாட்டை ஒரு குடையின் கீழ் ஆளப் போகிறான் என்பது நமக்கெல்லாம் நன்றாக தெரியும். ஆயினும், கடற் கொள்ளையர்களை வல்லவராயன் மற்றும் பத்து வணிகர்களை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி எதிர்க்க போகிறார்? அவருக்கு ஏதாவது  நேர்ந்து விடுமா என்று நமக்கு ஏற்படும் பரபரப்பு ஆசிரியரின் வெற்றி.

 மாறன் லோகா காதல்  நயமாக வும், நாகரீகமாகவும், சுவையாகவும் அமைந்துள்ளது. அவர்களிடையே காதல் முளைக்கும் விதமும், அவர்களிடையே அமையும் சம்பாஷனைகளும் காவியச் சுவை உடையவை. லோகா எதிர் காலத்தில் அருள் மொழி வர்மரை மணப்பாள் என்ற வரலாறு நமக்குத் தெரிந்தாலும் மாறன்-லோகா காதல் வெற்றியடைய வேண்டும் என நமக்குத் தோன்றுவது கதாசிரியரின் மாபெரும் வெற்றி.

ஆரம்பம் முதல் கடைசிவரை பரபரப்பாகப் போகும் கதை - ஆனால் ஓரிடத்திலும் பரபரப்பு திணிக்கப்படவில்லை.

எவ்வளவு நாள், எத்தனை நேரம் போன்ற தவறான சொற்றொடர்கள், சில அச்சுப் பிழைகள், பார்த்திபேந்திர பல்லவனைச் சுத்தமாக மறந்து விடுவது, " காவிரி மைந்தன்'" என்ற பெரிதும் கவராத தலைப்பு, சில
சம்பாஷனைகளில் ஒருமை-பன்மை குழப்பங்கள்,  சோழர் காலத்தில்  வாழும் கதாபாத்திரம் 'இந்து மதம்' எனக் குறிப்பிடுவது போன்ற சில குறைகளும் உண்டு.

Friday, March 6, 2015

விக்ரமனின் 'நந்திபுரத்து நாயகி' - என் விமர்சனம்

தமிழில் உள்ள பெரும்பாலான சரித்திர நாவலாசிரியர்களிடம் ஏதாவது ஒரு வகையில் கல்கி மற்றும் அவருடைய 'பொன்னியின் செல்வனின்' பாதிப்பு இருக்கும். அந்த மகா உன்னதமான நாவலில் வேண்டுமென்றே பல ரகசியங்களை வெளிப்படுத்தாமல் முடித்திருப்பார் கல்கி. இதன் காரணமாக சில ஆசிரியர்கள் அந்த நாவலின் தொடர்ச்சியை தனி நாவலாக எழுதியுள்ளனர். இந்த நாவலும் அந்த வகையைச் சேர்ந்தது. பொன்னியின் செல்வனின் தொடர்ச்சிதான் 'நந்திபுரத்து நாயகி'.

இந்த ஆசிரியர் கவிஞரும் கூட. அதனால் கதையின் பல பகுதிகள் கவிதை நடையில் உள்ளன. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் கவிதை நடையும் அனாவசிய உவமை நடையும் கதையின் வேகத்தைத் தடைப்படுத்துகின்றன. இந்த கதையை இன்னும் சுருங்கச் சொல்லியிருக்கலாம் என்பது எனது கருத்து. பல பக்கங்களை ஆசிரியர் வீணடித்து விட்டார்.

இவ்வளவு நீண்ட கதை எழுத பல மாதங்களோ சில வருடங்களோ கண்டிப்பாக ஆகியிருக்கும். அதனால் தானோ என்னவோ கதையின் நடையில் போக்கு சீராக அமையவில்லை. சுமாராக தொடங்கும் நாவல் விறுவிறுப்பாக மாறி மீண்டும் சுமாராகப் பயணித்து சப்பென முடிகிறது. அதுவும் முதல் 70-80 பக்கங்களில் கதையை கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் மூலம் தெரியப்படுத்துவது கதையின் பலவீனம்.

கதையில் பல பாத்திரங்கள். வாசகர்கள் குழம்பினால் தவறில்லை; ஆனால் கதாசிரியரே பாத்திரங்களின் உறவு முறைகளில் குழம்பிவிடுகிரார். மதுராந்தக சோழனுடைய மகனான் மதுரன் அக்காள் முறையான குந்தவையை அத்தை என்று விளிக்கிறான். தன்னுடைய சிற்றன்னையின் தங்கையை காதலிக்கிறான். ஆசிரியர் ஏன் இப்படி கோட்டைவிடுகிறார்?

நமது நாட்டுக்கு யாரால் இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டது? எப்போது? இந்த கதைப்படி சோழர்கள் காலத்திலேயே 'வட இந்தியா' என்று குறிப்பிட்டார்களாம். சரியான பிதற்றல். பொன்னியின் செல்வன் படிக்காதவர்களுக்கு ஒரு முன்னுரையாவது வரைந்து விட்டு இக்கதையை ஆசிரியர் ஆரம்பித்திருக்க வேண்டும். அந்த நாவலைப் படிக்காமால் இதைப் படித்தால் சில கதா பாத்திரங்கள் மற்றும் வசனங்கள் புரிய வாய்ப்பில்லை.

யார் நந்திபுரத்து நாயகி? இக்கதைப்படி குந்தவை. அவளா கதாநாயகி? இல்லை - இன்பவல்லி என்ற கற்பனைப் பாத்திரம். பின் ஏன் இந்தத் தலைப்பு? ஆசிரியருக்கே வெளிச்சம். போதாத குறைக்கு தலைப்புக்கு நியாயம் சேர்க்கவோ என்னவோ, பழையாறையை நந்திபுரம் என்ற பெயரில் பலர் தேவையின்றி  குறிப்பிடுகின்றனர். அனாவசியமாக சில சம்பவங்கள் அந்த நகரில் நடக்குமாறு ஆசிரியர் பார்த்துக் கொள்கிறார்.

பல சம்பவங்கள் நம்ப முடியாதவை. அநிருத்த பிரம்மராயரின் மாறுவேடத்தை பெரிய மர்மம் போல கடைசி வரை கொண்டு செல்வதும் அதை வாசகர்கள் யாரும் பிரம்மராயர் என்று ஊகித்திருக்கமாட்டார்கள் என்று ஆசிரியர் நம்புவது பெரிய நகைச்சுவை.

மேலும், ஆசிரியர் தாம் எடுத்துக் கொண்ட சில விஷயங்களை அப்படியே அம்போ என்று விட்டு விடுகிறார். யாரந்த கலைப்பித்து பிடித்து அலையும் கிழவர்? வாசகர்கள் சுலபமாக  ஊகித்திருப்பர். ஆனால் ஆசிரியர் கடமை தான் உருவாக்கிய மர்மத்தை கடைசியிலாவது உடைப்பது இல்லையா? நந்தினி கதாபாத்திரமும் அவளுடைய வளர்ப்பு மகன் பாண்டியன், அவனுடைய காதலி சேர மன்னன் மகள் போன்ற பல கதாபாத்திரங்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு காரணமின்றி காணாமல் போய் விடுகின்றன.

மொத்தத்தில் நல்ல தமிழ் தெரிந்த ஆனால் கதையை சரியாகக் கையாளத் தெரியாத ஆசிரியரால் படைக்கப்பட்ட கதை இது.

Sunday, October 19, 2014

"Delhi A Novel" by Khushwant Singh - My Review

Delhi is a beautiful city. Khushwant Singh is a great writer. When a good writer gets to write about a beautiful thing, I am not sure why he has to make his writing very ugly. This so called historical fiction is dreadfully bad and full of erotic. Almost all the characters in this book are ugly. It is very difficult to tolerate the kind of ugly words being used throughout the book.

I appreciate the usage of the language in different styles and tones based on the background of the narrator of the story from different times and different group. However, I felt the post independent and 1857 revolt narrations to be very long.

The author has really introduced a lot of monuments in Delhi. Still he missed out a lot more. Also, it is not the complete history of the city. He had chosen to narrate only few incidents.

Had the author avoided the ugly language, the book could have been more interesting. 

Thursday, September 25, 2014

எஸ். ராமகிருஷ்ணனின் "எனது இந்தியா" - My Review

சரித்திரம் என்பது ஆயிரம் முகங்களும் அவற்றுள் ஆயிரம் நாக்குகளும் கொண்டது. ஒவ்வொரு நாக்கு ஒரு மாதிரி பேசும். சில நாக்குகள் உண்மையும், சில நாக்குகள் பொய்யும், பல நாக்குகள் உண்மையும் பொய்யும் கலந்த கலவையும் பேசும். சில மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட செய்திகளை சில நாக்குகள் ஏதோ ஓரத்தில் பேசிக் கொண்டிருக்கும். ஆனால் அவற்றை கவனிப்பார் மிகவும் குறைவு. சரித்திரத்தைப் புரிந்து கொள்வதும் அதைப் புரிய வைப்பதும் சாதாரண காரியம் கிடையாது. 'எனது இந்தியா' என்ற இந்த நூலின் ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் அந்த கடினமான காரியத்தை மிகவும் எளிதாகக் கையாளுகிறார்.

 புத்தகக் கடைக்கோ நூலகத்துக்கோ சென்றால் பல தடி தடியான சரித்திர புத்தகங்களைப் பார்க்கலாம். ஆனால் அவை எந்த அளவுக்கு சுவாரசியமாக இருக்கும் என்பது கேள்விக்குறி. இந்தப் புத்தகமும் சரித்திரப் புத்தகம் தான். இதுவும் தடியான புத்தகம் தான். ஆனால் சரித்திரத்தை சுவைப்பட தெரிவிப்பதில் சரித்திரம் படைத்துள்ளார் இந்த ஆசிரியர்.

 இந்தப் புத்தகத்தில் உள்ள பல விஷயங்கள் நாம் வரலாற்றில் கவனிக்காத, மறந்து போன அல்லது சிலரால் மறைக்கப்பட்ட உண்மைகள்.

 எவரெஸ்ட் தெரியும். அது ஒரு ஆங்கில அதிகாரியின் பெயர் என்பதோ அந்த சிகரத்துக்கு இப்பெயர் வைக்கப்பட்டது அதிகார வர்கத்தின் செயல்பாடு என்பதோ நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

 இன்றும் கூட ஆங்கிலர் ஆட்சியைப் புகழ்பவர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால் அவர்கள் சாதி, கல்வி, விவசாயம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளிலும் எப்படியெல்லாம் திட்டமிட்டு நம்மைச் சுரண்டினார்கள் என்பது தெளிவாக விளங்கும்.

 திப்புவையும் மருது சகோதரர்களையும் நாம் கொண்டாடி இருக்கிறோம். ஆனால் அவர்களுடைய வாரிசுகளுக்கு நேர்ந்த கதியை நினைத்துப் பார்த்ததுண்டா?

 ஆங்கிலேயர் ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சங்களுக்கு பிணிகளுக்கும் என்ன பின்னணி என்பதை யோசித்திருப்போமா? ஆங்கிலர் ஆள்வதற்கு முன்பாக இந்த அளவு பாதிப்பு நம் நாட்டுக்கு ஏற்பட்டதுண்டா என்பதை ஆராய்ந்திருப்போமா?

 உப்பு சத்தியாகிரகம் மிகவும் பிரசித்தம். ஆனால் உப்பு வேலி? அது வரலாற்றில் மறைக்கப்பட்ட கொடுமை.

 ஜஹாங்கீரின் மகள், ஔரங்கசீப்பின் செருப்பு ஊர்வலம், மன்னன் ஜெய்சிங்கின் கொடுங்கோன்மை, முதல் சுதந்திரப் போருக்கு முன்னதாகவே ஏற்ப்பட்ட சந்தால் மக்களின் ஆங்கிலேயருக்கு எதிரான எழுச்சி, யேல் என்ற ஊழல்வாதியின் பெயரால் ஏற்ப்பட்ட உலகப் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகம், பல ஆங்கில அதிகாரிகளின் திருட்டுத்தனம் என கணக்கிலடங்கா வரலாற்று உண்மைகள் - எல்லாம் அநேகமாக நாம் கவனிக்கத் தவறிய விஷயங்கள்.

 இது அனைவரும் படித்து ஆதரிக்க வேண்டிய புத்தகம்.