Showing posts with label Poem. Show all posts
Showing posts with label Poem. Show all posts

Thursday, September 25, 2014

Haiku - 8

சுவரெங்கும் சித்திரங்கள்
சித்திரங்களில் கடவுளர்
சிறுநீர் கழிக்காதே வாசகம்

சுஜாதாவின் "ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் " - My Review

கதை எழுதுவது எப்படி? கவிதை எழுதுவது எப்படி? கடவுளாக அந்தத் திறமையை கொடுத்தால் தான் உண்டு.

 இந்தப் புத்தகத்தைப் படித்தால் ஹைக்கூ கவிதைகள் நன்றாக எல்லாருக்கும் எழுத வரும் என சொல்ல முடியாது. ஆனால் ஹைக்கூவை இதை விட அருமையாக யாராலும் எழுத்து வடிவில் புரிய வைக்க முடியாது.

Haiku - 7

வாசலில் மழை நீர்
 நீரில் அசைவது என்ன
 பாம்பா பயமா

Haiku - 6

ரயிலிலே ஒரு சிறு பெண்
 முகத்தில் லட்சுமி கடாட்சம்
 சில்லறை பணம் கேட்கிறாள்

Haiku - 5

சவரம் மறந்த முகம்
 தூக்கம் இழந்த கண்கள்
 ஐ.டி. கம்பெனியில் வேலை.

Haiku - 4

கோவிலுக்குள்ளும் கூட்டம்
 கோவிலுக்கு வெளியிலும் கூட்டம்
 பணத் தேவை

Haiku - 3

சின்னஞ்சிறு குழந்தை அது
 விழுந்தது மீண்டும் எழுந்தது
 வாழ்க்கைப் பாடம்.

Haiku - 2

வேலை இன்னும் முடியவில்லை
 நள்ளிரவு மணி பன்னிரண்டு
 ஓ இன்று மே தினம்.

புதுக் கவிதையில் ராமாயணம் - 2

ராமனின் தீரத்தைக் கேட்ட வால்மீகி
நதித் தீரத்திற்க்குச் சென்றான்!
வல்வில் ராமனின் கதையைக் கேட்ட வால்மீகி
அன்றில் பறவைகளைக் கண்டான்!
அவை - ஆண் ஒன்று!
பெண் ஒன்று!
அது மட்டுமா?
அவற்றின் இதயமும் ஒன்று!
மணமாகா வால்மீகி
மனமொத்த தம்பதியரை
மனமார பார்த்து மகிழ்ந்தான்!
அம்பு ஒன்று பறந்து வந்தது!
ஆணின் உயிர் பறந்து சென்றது!
ஆண் பறவை துடித்து இறந்தது!
பெண் பறவை இருந்து துடித்தது!
கண்களின்றி செவிகளின்றி
கை கால்கள் எதுவுமின்றி
வாழ்ந்திடலாம் இவ்வுலகில்! - ஆனால்
வாழ்க்கையே இல்லையென்றால்
வாழ்வதெப்படி?
மனத்தை அடக்கிய வால்மீகி
சினந்தான் - கண்களைச்
சிவந்தான் !
துடித்திட்டான்! - சாபம்
விடுத்திட்டான்!
"வேடனே! மூடனே!
படுபாதகம் செய்திட்ட படுபாவியே!
அலை கடலைப் போல் ஓயாமல்
அலைவாய் இவ்வுலகில்!
நிலையான இடமின்றி
மலையான் துன்பத்துடன்
அலைந்திடுவாய் அற்பப் பதரே!"
சாபமிட்ட வால்மீகி
சாந்தமடைந்த் பின் சிந்தித்தான்!
சாபமே சுலோகம் போல்
இருந்ததால் வியந்திட்டான்!
மும்மூர்த்திகளில் ஒருவனாம்
நான்முகாங்களைக் கொண்டவன் -
நம்மையெல்லாம் படைத்தவன்
தோன்றினான் திடீரென்று!
சிந்தனை செய்த வால்மீகி
வந்தனம் செய்தான் பிரம்மனுக்கு!
ரகுராமன் அவதரித்த கதை
சுலோகமாய் வடித்துத் தர
ஆணையிட்டான் நான்முகன்!
நான்முகனின் ஆணையை
ஒருமுகமாய் ஏற்ற முனிவன்
ஞானக் கண்ணும் பெற்றிட்டான்!

Saturday, September 6, 2014

Haiku 1

கீரை உடலுக்கு நல்லது
கூவி கூவி விற்கிறாள்
உடல் நலிந்த கிழவி

புதுக் கவிதையில் ராமாயணம் - 1

மயங்காதவன் பிற பெண்களிடம்
தயங்காதவன் கொடும் பகைவரிடம்
கலங்காதவன் கடும் போர்க்களத்தில்
வருந்தாதவன் எந்நேரத்திலும்
சிலைகளுக்கில்லை அவன் போல் அழகு
கலைகளுமில்லை அவனுக்குத் தெரியாமல்
இப்படி உண்டோ மனிதன்
கேட்டானே வால்மீகி !
சொன்னானே நாரதன் !
நல்லவனும் அவனே
வல்லவனும் அவனே
மாயவனும் அவனே
தூயவனும் அவனே
கதிரவனுக்கு அவன் போல் வெளிச்சமில்லை
முழு நிலவுக்கு அவன் போல் வனப்புமில்லை
வில் வீரன் - நல்ல
சொல் வீரன்
வானத்தின் தேவர்களும்
வையகத்தின் மனிதர்களும்
கீழுள்ள நாகர்களும்
அவன் காலடியில்
அவனே ஸ்ரீ ராமன்